பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்க்கும் நடவடிக்கை

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பம்

by Staff Writer 01-01-2019 | 3:25 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய கையேடுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். குறித்த விண்ணப்பங்களை, எதிர்வரும் நாட்களுக்குள் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். கையேடுகளை நன்றாக வாசித்து, விண்ணப்பிப்பதற்கு ஏற்ற பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்கள் 2 அல்லது 3 பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், மாணவர்களுக்கான தகுந்த பாடங்களைக் கற்கும் சந்தர்ப்பம் அற்றுப்போவதாகவும் பேராசிரியர் மொஹான் டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுள் 1,67,907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, 2018 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.