by Staff Writer 01-01-2019 | 9:39 PM
Colombo (News 1st) சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் சிலர் மூன்றாவது நாளாக இன்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மூன்றாவது நாளாகவும் இன்று காலை ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை மாலை வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் உயர்மட்ட முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நியமனங்கள் மற்றும் கடந்த காலத்தில் நிறுவனத்திற்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஊழியர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிறுவனத்தின் நிலையான வைப்பிலிருந்த 677 கோடி ரூபா, கடந்த 3 வருடங்களுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, அண்மையில்
ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியதாக, சுயாதீனத் தொலைக்காட்சி ஊழியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதேவேளை, இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் 13 ஊழியர்களின் சேவையை இடைநிறுத்த, கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர்.