பாகிஸ்தான் அதன் வழிமுறைகளை சீர்திருத்த காலஞ்செல்லும் – நரேந்திர மோடி

பாகிஸ்தான் அதன் வழிமுறைகளை சீர்திருத்த காலஞ்செல்லும் – நரேந்திர மோடி

பாகிஸ்தான் அதன் வழிமுறைகளை சீர்திருத்த காலஞ்செல்லும் – நரேந்திர மோடி

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2019 | 10:13 pm

பாகிஸ்தான் அதன் வழிமுறைகளை சீர்திருத்த காலஞ்செல்லும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீதான அழுத்தத்தைப் பேணுவதற்காக இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் அதன் நடவடிக்கைகளை விரைவில் சீர்திருத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கைக்குழு, ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதுவருட தினத்தில் பாகிஸ்தான், இந்தியாவில் தீவிரவாத தாக்குதலொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்ததாக இந்திய இராணுவம் குற்றஞ்சுமத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்