மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றமடைகிறது

மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றமடைகிறது

மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றமடைகிறது

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2019 | 5:47 pm

மாசிடோனியா நாட்டின் பெயரை மாற்றும் தீர்மானத்திற்கு அந்நாட்டுப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வடக்கு மாசிடோனியக் குடியரசு என நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பெயர் மாற்றமடைவதனூடாக 27 ஆண்டுகளாக கிரேக்கத்திற்கும் மாசிடோனியாவிற்கும் இடையில் நிலவிய பிணக்கு முடிவடையவுள்ளது.

கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற பெயருடைய பிராந்தியம் ஒன்று காணப்படுவதால், இந்த பிணக்கு உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.