போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழு வருகை தரவுள்ளது

போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழு வருகை தரவுள்ளது

போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழு வருகை தரவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2019 | 3:32 pm

Colombo (News 1st) தெஹிவளையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் தனபால தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணை கைது செய்யும் வகையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே குறித்த பொலிஸ் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

சார்க் நாடுகளில் போதைப்பொருள் குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கடந்த மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி வாய்ந்த குறித்த ஹெரோயின் தொகையானது, கடந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகையாகும்.

சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் பங்களாதேஷில் தலைமறைவாகியுள்ளாரென தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

குறித்த பெண் மற்றும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரஜைகளின் வீடுகளில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.