சர்வதேச கிரிக்கெட் சபையில் உறுப்பினராக அமெரிக்க கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் சபையில் உறுப்பினராக அமெரிக்க கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் சபையில் உறுப்பினராக அமெரிக்க கிரிக்கெட்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2019 | 9:36 am

Colombo (News 1st) தமது 105ஆவது உறுப்பினராக அமெரிக்க கிரிக்கெட் இணைந்துள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் அரசியலமைப்பின்படி 93ஆவது இணை உறுப்பினராக இணைவதற்கான அமெரிக்க கிரிக்கெட்டின் விண்ணப்பம், சபையின் உறுப்பு நாடுகளின் பரிந்துரைக்கமைய கடந்த வருடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் அபிவிருத்தி நிதிக்கொள்கையின் கீழ் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளவும் அமெரிக்க கிரிக்கெட் தகுதி பெற்றுள்ளது.

அத்துடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை அனுமதிக்கவும் தகுதிபெற்றுள்ளது.