கோப் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

கோப் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

கோப் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2019 | 5:02 pm

Colombo (News 1st) கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

தெரிவுக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய கோப் குழுவிற்கு 16 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப் குழு உறுப்பினர்கள் கூடி தங்களுக்கான தலைவரைத் தெரிவு செய்வர்.

ரவூப் ஹக்கீம், சுஜீவ சேனசிங்க, கலாநிதி ஹர்ச டி சில்வா, அஜித் பி.பெரேரா, வசந்த அலுவிஹாரே, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் செனவிரத்ன, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ரவீந்திர சமரவீர, சுனில் ஹந்துன்நெத்தி, மாவை சேனாதிராஜா மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரே கோப் குழுவிற்கான புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.