அமெரிக்க – மெக்ஸிகோ தடுப்புச்சுவர் திட்டத்திற்கு நிதியொதுக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்க – மெக்ஸிகோ தடுப்புச்சுவர் திட்டத்திற்கு நிதியொதுக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்க – மெக்ஸிகோ தடுப்புச்சுவர் திட்டத்திற்கு நிதியொதுக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2019 | 2:05 pm

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளை முடித்துக்கொள்வதற்கு, தமது தடுப்புச்சுவர் திட்டத்துக்கு நிதியொதுக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் வளர்ந்துவரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாயின், தம்மால் வலியுறுத்தப்படும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு நிதியொதுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அவர் இன்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றும்போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், காங்கிரஸினால் அவரது எல்லைச்சுவர் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸினை மீறிச் செயற்படுவதற்காக தேசிய அவசரகால நிலையை இந்தத் தொலைக்காட்சி உரையின்போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதிலும் அவர் அந்த அறிவிப்பினை விடுக்கவில்லை.

ட்ரம்பினால் நாட்டு மக்களுக்கு ஆற்றப்பட்ட இந்த முதலாவது தொலைக்காட்சி உரையினை ஓவல் அலுவலகத்திலிருந்து அவர் வழங்கியிருந்தார்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதிக்கும் காங்கிரஸுக்குமிடையிலான முறுகல்நிலை காரணமாக நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமல் கடந்த 18 நாட்களாக அரசதுறைப்பணிகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால், அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்படாமல் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.