மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய விசேட குழு

மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய விசேட குழு

மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2018 | 4:07 pm

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 80 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மருந்து வகைகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து பிரிவிற்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி காரணதாக நிதி ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், நாட்டிற்கு மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளும் தாமதமடைந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்