மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – சன் குகவரதன்

மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – சன் குகவரதன்

மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – சன் குகவரதன்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2018 | 4:23 pm

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு ​கோரி மேல் மாகாண சபை உறுப்பினர் சன் குகவரதன் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

பண மோசடி தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டார்.

720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன் பின்னர் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இன் நிலையில் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து பொலிஸ் தலைமையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கட் –


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்