பஸ் கட்டண முறைப்பாட்டுக்கு 1955ஐ அழையுங்கள்

பஸ் கட்டண முறைப்பாட்டுக்கு 1955ஐ அழையுங்கள்

பஸ் கட்டண முறைப்பாட்டுக்கு 1955ஐ அழையுங்கள்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2018 | 4:03 pm

பஸ் கட்டணத்தை விட மேலதிகமாக கட்டணத்தை அறவிட்ட 71 பஸ் வண்டிகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண பஸ் சேவை தொடர்பிலேயே 40 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 4 நாட்களுக்குள் இந்த முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக கட்டணம் அறவிடப்படும் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைபாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் கூறியுள்ளமது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் கட்டணம் கடந்த 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைவடைந்தது.

இதன்பிரகாரம் சாதாரண, அரைசொகுசு, சொகுசு, பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்