சிறைச்சாலைகளுக்கு அருகில் கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

சிறைச்சாலைகளுக்கு அருகில் கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

சிறைச்சாலைகளுக்கு அருகில் கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2018 | 3:56 pm

நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளை அண்மித்த பகுதிகளில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட சட்டவிரோத உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் கடந்த 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கைதிகளிடமிருந்து 169 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனை தவிர, 165 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசி பற்றரிகள், மற்றும் போதைப்பொருள் அடங்கிய 118 போதைப்பொருள் பக்கற்றுகள் கைதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையை அண்மித்த பகுதியிலேயே, அதிகமான உபகரணங்கள் கைப்பற்றபபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்