பங்களாதேஷ் பொதுத் தேர்தல் இன்று

பங்களாதேஷ் பொதுத் தேர்தல் இன்று

by Staff Writer 30-12-2018 | 7:40 PM

1971ம் ஆண்டு சுதந்திரமடைந்த பங்களாதேஷில் 11 ஆவது பொதுத்தேர்தல் இன்று நடைபெற்றது.

இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு , மாலை 3.30 வரை இடம்பெற்றது வாக்களிப்பு நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற மோதலொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் தேசிய கட்சி மற்றும் அவாமி லீக் கட்சியினருக்கிடையில் இடம்பெற்ற மோதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். பங்களாதேஷில் தேர்தல் பிரசாரங்களின் போது இடம்பெற்ற வன்முறைகளினால் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களில் 30 பேர், பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இன்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 300 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளர் பிரதமர் ஷேக் ஹஸீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி முன்னிலையில் இருப்பதாக தேர்தலுக்கு முன்னரான கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.