வௌ்ளத்தினால் 474 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன

வௌ்ளத்தினால் 474 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன

வௌ்ளத்தினால் 474 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2018 | 7:39 pm

வட மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 474 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

4,522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சென்றிருந்தார்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் பேராறு, வசந்தபுரம்,பண்டாரவன்னியன் போன்ற கிராமங்களிலுள்ள மக்களுடன் டி.எம் சுவாமிநாதன் கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 86 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்