மன்பிஜ் நகருக்குள் பிரவேசித்த சிரிய இராணுவம்

மன்பிஜ் நகருக்குள் பிரவேசித்த சிரிய இராணுவம்

by Staff Writer 29-12-2018 | 3:33 PM
சிரிய அரசின் ஆதரவுப் படையினர், நாட்டின் வட பகுதியில் உள்ள மன்பிஜ் நகருக்கு பிரவேசித்துள்ளன. 6 வருடங்களுக்கு பின்னர், சிரியா அரசு தரப்பு முதன்முறையாக இந்த நகருக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த நகர் மீது துருக்கிய படையினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், மன்பிஜ் நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள குர்து படையினர், அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளது. சிரியாவில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிவுப்பானது, அமெரிக்க படைகளின் ஆதரவை பெற்றிருந்த குர்து படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மன்பிஜ் நகரை சூழவுள்ள பிராந்தியத்தில், குர்து போராளிகள் மீது புதிய தாக்குதல்களை தொடுக்கவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துவான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மன்பிஜ் நகரில் சிரிய அரசு ஆதரவுப் படைகள் நிலைகொண்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.