தலாவ – கெலேகும்புக்வெவ மக்களுக்கான குடிநீர்த் திட்டம் இன்று ஆரம்பம்

தலாவ – கெலேகும்புக்வெவ மக்களுக்கான குடிநீர்த் திட்டம் இன்று ஆரம்பம்

தலாவ – கெலேகும்புக்வெவ மக்களுக்கான குடிநீர்த் திட்டம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2018 | 8:43 pm

Colombo (News 1st) அரசியல் வாக்குறுதிகளுக்கு ஏமாந்து, தாகத்தை தணிப்பதற்கு ஒரு துளி நீரைக்கோரி வருடக் கணக்கில் பலரிடம் கோரிக்கை விடுத்த, தலாவ – கெலேகும்புக்வெவ மக்களுக்கு, மக்கள் சக்தி குழுவினர் புதிய எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்ரல் பெயாரின்ங் நிறுவனத்துடன் மக்கள் சக்தி குழுவினர், கெலேகும்புக்வெவ கிராமத்திற்கு இன்று சென்றிருந்தனர்.

அனுராதபுரம் – தலாவ – கெலேகும்புக்வெவ கிராமத்தைக் கேந்திரமாகக் கொண்டுள்ள கிராம மக்கள் பல தசாப்தங்களாக அருந்திய நீர் காரணமாக, பெரும்பாலானவர்கள் சிறுநீரக நோயாளர்களாக மாறியிருந்தனர்.

அதிகாரிகள் இதைப் பொருட்படுத்தாதிருந்தமையால், சரத் குமார விஜேசிங்க கிராம மக்களுக்காக மக்கள் சக்தி குழுவினருக்கு அழைப்பை ஏற்படுத்தி உதவி கோரியதோடு, குடிநீர் திட்டத்திற்காக தனது தனிப்பட்ட காணியையும் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, கெலேகும்புக்வெவ கிராமத்திற்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடனான குடிநீர்த் திட்டமொன்றை வழங்குவதற்கான செயற்பாடுகளை மக்கள் சக்தி ஆரம்பித்தது.

சென்ரல் பெயாரின்ங் நிறுவனம் அதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளது.

கிராம மக்களின் வாழ்க்கைக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தருணத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக, சென்ரல் பெயாரின்ங் நிறுவனத்தின் யொஹான் தென்னகோன், நயனு தென்னகோன், அஞ்சலி தென்னகோன் உள்ளிட்ட சிலரும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் உள்ளிட்ட மக்கள் சக்தி குழுவினரும் இணைந்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்