டிக்கோயா – போடைஸ் தோட்டத்தில் தீ

டிக்கோயா – போடைஸ் தோட்டத்தில் தீ

டிக்கோயா – போடைஸ் தோட்டத்தில் தீ

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2018 | 2:29 pm

Colombo (News 1st) ஹற்றன் – டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில், 30 ஏக்கர் பிரிவிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தீ பரவியுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில், 24 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீடுகளில் தங்கியிருந்தவர்களின் அனைத்து உடைமைகளும் தீக்கிரையாகியுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து, 24 குடும்பங்களை சேர்ந்த 107 பேர் போடைஸ் தோட்ட வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் தோட்ட நிர்வாகத்தினரால் வழங்கப்படுவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்