பொலிஸ் சுற்றிவளைப்பில் 40 கிளர்ச்சியாளர்கள் பலி

எகிப்தில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 40 கிளர்ச்சியாளர்கள் பலி

by Chandrasekaram Chandravadani 29-12-2018 | 6:41 PM
எகிப்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கிஸா மற்றும் வட சினாய் பகுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, உட்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு குறித்த கிளர்ச்சியாளர்கள், சுற்றுலாத் தளங்கள், தேவாலயங்கள் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிஸா பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட குண்டுவெடிப்பின் பின்னர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நால்வர் பலியான குறித்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், கடந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.