அமைச்சுகளின் விடயப் பரப்புகள் உள்ளடங்கிய வர்த்தமானி

அமைச்சுகளின் விடயப் பரப்புகள் உள்ளடங்கிய வர்த்தமானி

அமைச்சுகளின் விடயப் பரப்புகள் உள்ளடங்கிய வர்த்தமானி

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2018 | 2:17 pm

Colombo (News 1st) அமைச்சுகளின் விடயப்பரப்புகள் உள்ளடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் நேற்றிரவு அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பவைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் பணிப்பாளர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொலிஸ் திணைக்களம் மற்றும் அரச அச்சகம் ஆகியன பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் மத்தியவங்கி மற்றும் அரச ஊடக நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து அரச வங்கிகளும் நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தொல்பொருளியல் திணைக்களம், வீடமைப்பு மற்றும் கலாசார, உள்ளக அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்