ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரமவின் இரு அமைச்சுப் பதவிகள் நீக்கம்

ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரமவின் இரு அமைச்சுப் பதவிகள் நீக்கம்

ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரமவின் இரு அமைச்சுப் பதவிகள் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2018 | 6:12 pm

Colombo (News 1st) ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.

அரச அச்சகத்தால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக, கடந்த 20 ஆம் திகதி ஹரின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேநாளில், அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப, ஆய்வு அமைச்சராக மலிக் சமரவிக்ரம பதவியேற்றார்.

எனினும், அவர்கள் இருவரும் உடன் அமுலாகும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததாக, கடந்த 26 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 26 ஆம் திகதி வௌியிடப்பட்ட மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய, இரண்டு அமைச்சுப் பதவிகளில் அவர்கள் நீக்கப்பட்டு, ஏனைய அமைச்சுப் பதவிகளில் அவர்கள் மீள நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுப் பதவியிலிருந்து ஹரின் பெர்ணான்டோவும் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சுப் பதவியிலிருந்து மலிக் சமரவிக்ரவும் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமைச்சுப் பதவிகளுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக அஜித் பீ.ரெரேரா மற்றும் சஜீவ சேனசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 26 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்