நாடகக் கலைஞரும் நடிகருமான சீனு மோகன் காலமானார்

நாடகக் கலைஞரும் நடிகருமான சீனு மோகன் காலமானார்

by Chandrasekaram Chandravadani 27-12-2018 | 4:40 PM
பிரபல நாடகக் கலைஞரும் நடிகருமான சீனு மோகன் தனது 62 ஆவது வயதில் இன்று (27) காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்றுவந்த சீனு மோகன், இன்று காலை மாரடைப்பால் திடீரென காலமானார். கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என அழைக்கப்பட்ட இவர், சுமார் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துள்ளார். 'வருஷம் பதினாறு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சீனு மோகன், அஞ்சலி, தளபதி, தலைவாசல், இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச் மற்றும் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், அண்மையில் வௌியாகி வசூலில் சாதனை படைத்த செக்கச்சிவந்த வானம் சீனு மோகனிற்கு இறுதித் திரைப்படமாக அமைந்துள்ளது. அதேநேரம், அன்னாரின் இறுதிச்சடங்கு 29.12.2018 (சனிக்கிழமை) அண்ணாநகரில் நடைபெறவிருவிருப்பதாக, கிரேஸி மோகன் தெரிவித்துள்ளார்.