டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிக்கும் சாத்தியம்

டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியம்

by Staff Writer 27-12-2018 | 3:05 PM
Colombo (News 1st) வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக, அடுத்த வருடத்தின் முதல் சில மாதங்களில் டெங்கு நோயளர்களின் வீதம் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் அதிகபடியான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் நோய்த் தாக்கங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்