by Staff Writer 26-12-2018 | 2:58 PM
Colombo (News 1st) கிரேண்பாஸ் - ஹேனமுல்ல குடியிருப்புத் தொகுதியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான புளுமென்டல் சங்க என்பவரின் ஆலோசனையின் பெயரில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.