பஸ், முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணம் குறைப்பு

பஸ், முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணம் குறைப்பு

by Staff Writer 25-12-2018 | 4:15 PM
Colombo (News 1st) பஸ், முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை வேன் கட்டணங்களை நாளை (26) முதல் குறைப்பதற்கு, அந்தந்த சங்கங்கள் தீர்மானித்துள்ளன. ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 10 ரூபாவினாலும் அண்மையில் குறைக்கப்பட்டது. அதன்படி, ஐ.ஓ.சி. நிறுவனமும் டீசலின் விலையை 5 ரூபாவாலும் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இந்தநிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் பயனை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.