நத்தார் தினத்தில் பாப்பரசரின் கோரிக்கை

நத்தார் தினத்தில் பாப்பரசரின் கோரிக்கை

by Staff Writer 25-12-2018 | 8:13 PM
எளிமைக்கு முன்னுரிமை வழங்கி, செல்வந்தர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு முயற்சிப்பது அவசியம் என மக்களிடம், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நத்தார் பண்டிகையினை முன்னிட்டு விடுத்துள்ள தகவலிலேயே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். வருடாந்தம் இடம்பெறும் விசேட ஆராதனை, புனித பேதுருவானவர் பேராலயத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இயேசுநாதரிடம் காணப்பட்ட பண்புகளை, எவ்வாறு வாழ்க்கையுடன் இணைப்பது என்பது தொடர்பில் பரிசுத்த பாப்பரசரினால் இதன்போது தெளிவூட்டப்பட்டது. பௌதீக வளங்களை நோக்கி தற்போது மக்கள் பயணிப்பதன் ஊடாக, வாழ்க்கை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இங்கு தெரிவித்தார். விசேட ஆராதனைக்காக வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பரிசுத்த பாப்பரசர் இதன்போது ஆசி வழங்கினார். நாம் எம்மிடமே வினவுவோம். நாம் உயிர் வாழ்வதற்கு பௌதீக விடயங்கள் உண்மையில் தேவையா? இன்று மனித குலம் பேராசை கொண்டி பிரிவாக மாறியுள்ளது. இன்று மக்கள் பொருட்களை சேகரிப்பதிலேயே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். தற்காலத்திலும் மனிதகுல வரலாற்றிலும் மனித வரலாறு வீணான உணர்வுகளாலும் ஆசைகளாலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உலகில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழும்போது பெரும்பாலான மக்கள் நாளாந்த உணவும் கூட இல்லாமல் பட்டினியில் வாடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பரிசுத்த பாப்பரசரின் உரையை கேட்பதற்காகவும் ஆசி பெற்றுகொள்ளும் நோக்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வத்திகானில் கூடியிருந்தனர்.