தங்காலை துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

தங்காலை துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

தங்காலை துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Dec, 2018 | 9:09 am

Colombo (News 1st) தங்காலை, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ரி – 56 ரக துப்பாக்கியும் கைத்துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்வபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்