ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸின் ஆற்றல்கள் அணிக்கு அனுகூலம் – நிரோஷன் திக்வெல்ல

ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸின் ஆற்றல்கள் அணிக்கு அனுகூலம் – நிரோஷன் திக்வெல்ல

ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸின் ஆற்றல்கள் அணிக்கு அனுகூலம் – நிரோஷன் திக்வெல்ல

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2018 | 8:44 pm

Colombo (News 1st) ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோரின் ஆற்றல்கள் அணிக்கு அனுகூலமாக இருக்கும் என இலங்கை அணி வீரரான நிரோஷன் திக்வெல்ல கூறியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்சர்ச்சில் நாளை (26) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெலிங்டன் ஆடுகளத்தை விட கிறைஸ்சர்ச் ஆடுகளம் வித்தியாசமானது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற கசுன் ரஜிதவுக்கு பதிலாக துஷ்மந்த சமீரவுக்கு இலங்கை அணியில் வாய்ப்பளிக்கப்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், வெலிங்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணி மாற்றமின்றி இரண்டாவது போட்டியிலும் களமிறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இதுவரை 33 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அவற்றில் 8 போட்டிகளில் இலங்கையும் 14 போட்டிகளில் நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளதுடன் 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளன.

இவ்விரண்டு அணிகளும் கிறைஸ்சர்ச்சில் இறுதியாக 2014 ஆம் ஆண்டு மோதியுள்ளதுடன், அந்தப் போட்டியில் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் திமுத் கருணாரத்ன 152 ஓட்டங்களைப் பெற்றமையும் சிறப்பம்சமாகும்.

நாளைய போட்டி இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்