நவாஸ் ஷெரீபு(f)க்கு 7 வருடங்கள் சிறை

நவாஸ் ஷெரீபு(f)க்கு 7 வருடங்கள் சிறை

by Staff Writer 24-12-2018 | 4:17 PM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு ஊழலுக்கு ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமது வருவாய் மற்றும் சொத்துக்களுக்கு அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கில் தமது வருவாய் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதை தொடர்ந்து அவருக்கு 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் நவாஷ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கடந்த ஜூலை மாதத்தில் ஏற்கனவே 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், அவற்றில் ஒரு குற்றச்சாட்டுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட குறித்த தீர்ப்பின் பிரகாரம், நவாஸ் ஷெரீப்பிற்கு 10 வருட சிறைத்தண்டனையும் அவரது மகள் மரியம் நவாஸூக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஏனைய இரண்டு ஊழல் வழக்குகளுக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளதாக இஸ்லாமாபாத் ஊலழ் தடுப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 14 வருட சிறைத்த்டனை விதிக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.