ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-12-2018 | 7:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 02. கடும் மழை காரணமாக வட மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 03. கொழும்பு – வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலையில் தீ பரவியது. 04. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 05. கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் நேற்று ஆரம்பமாகின. 06. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய சுமார் 90,000 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டுச் செய்தி 01. இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மித்த சுன்டா ஸ்ரைட் (Sunda Strait) பகுதியில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி குறைந்தது 281 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,016 பேர் காயமடைந்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.