விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 4035 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 4035 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 4035 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2018 | 4:21 pm

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 4035 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 02 மணி வரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 1122 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 885 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 5550 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்