சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Dec, 2018 | 6:50 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. வேலை செய்யும் ஒருவருக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபா வழங்குவது தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது என நான் எண்ணுகிறேன் என, தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

02. வட மாகாணத்தின் சில பகுதிகளில் பதிவாகிய அதிகூடிய மழை வீழ்ச்சியினால், சுமார் 5775க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

03. மலையக இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

04. எவ்வித அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் மோசடிகளுக்கும் அரச அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

05. பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. நேபாளத்தில் கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

02. ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், மேலதிக வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளையாட்டுச் செய்தி

01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் எதிர்ப்பார்ப்பில் காத்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்