ஹங்கேரியில் புதிய சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஹங்கேரியில் புதிய சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

by Chandrasekaram Chandravadani 22-12-2018 | 9:53 AM
ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், மேலதிக வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர். இதேவேளை, தேவையற்ற சட்டங்களை தாம் மாற்றுவதாகவும் அதிக ஊதியம் பெறவிரும்புபவர்கள் அதிக மணித்தியாலங்கள் வேலை செய்யலாம் எனவும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் (Victor Orban) தெரிவித்துள்ளார். இந்தநிலையில், புதிய சட்டத்தின் கீழ், 1 வருடத்துக்கான 250 மணித்தியாலங்கள் மேலதிக வேலைநேரத்தை 400 மணித்தியாலங்களாக அதிகரித்துள்ளது. அதேநேரம், குறித்த மேலதிக வேலைநேரத்துக்கான கொடுப்பனவுகளை 3 வருடங்கள் வரை தாமதித்து வழங்க முடியும் எனவும் குறித்த புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, குறித்த சட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளதுடன், பாரிய பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.