மெகசின் சிறைச்சாலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

மெகசின் சிறைச்சாலையில் ஹெரோயினுடன் கைதி ஒருவர் கைது

by Staff Writer 22-12-2018 | 11:50 AM
Colombo (News 1st) மெகசின் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 4 கிராம் 690 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேநேரம், 4 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில், கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொரளை பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.