மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன்

மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன்: கமல்ஹாசன் அறிவிப்பு

by Bella Dalima 22-12-2018 | 4:19 PM
மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 5 பேர் என மொத்தம் 23 பேர் பங்கேற்றிருந்தனர். சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்,
தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரச்சினைகளை முன்வைத்து தேர்தலின் போது பரப்புரை செய்யப்படும். கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர். மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வோம். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன், எந்த தொகுதி என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
என தெரிவித்துள்ளார்.