பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2018 | 7:42 am

Colombo (News 1st) எரிபொருளின் விலை பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட நிலையில், பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை, நிதி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

ஒரு லீற்றர் டீசலின் விலையை 5 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவினாலும் நேற்று இரவு முதல் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர், 3 சந்தர்ப்பங்களில் டீசலின் விலை குறைக்கப்பட்டதுடன், கடந்த மாதம் முதலாம் திகதி டீசல் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், கடந்த 15 ஆம் திகதி டீசலின் விலை 5 ரூபாவினாலும் கடந்த மாதம் 30 ஆம் திகதியும் டீசல் மற்றும் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்யைில், பஸ் கட்டண குறைப்பிற்கான வீதம் தொடர்பில் இணக்கம் எட்டபடலாம் என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

இதுவரை டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதிபலனை பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தனியார் பஸ் கட்டணத்தை 5 வீதத்தால் குறைக்க முடியும் என்பதை உறுதியாக கூறமுடியும் என தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்