சிரச – சக்தி நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்றும் திறந்து வைப்பு

சிரச – சக்தி நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்றும் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2018 | 8:51 pm

Colombo (News 1st) சமாதானத்தின் தகவலுடன் பிறக்கும் நத்தார் பண்டிகைக்கு இன்னும் இருப்பது 3 நாட்கள் மாத்திரமே.

அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிரச – சக்தி நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு – 02, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள MTV/MBC தலைமையகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், சிரச – சக்தி நத்தார் வலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை திருச்சபையின் கொழும்பு பேராயர் டிலோராஜ் கனகசபை தலைமையில் நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மொரட்டுவை புனித செபஸ்டியன் தேவாலயத்தின் இசைக்குழுவினரின் கரோல் நிகழ்வை அலங்கரித்தது.

வத்திக்கானில் பாப்பரசர் புனித பிரான்ஸிஸால் ஆசி வழங்கப்பட்ட அன்னை மரியாளின் திருச்சொரூபத்தை காண்பதற்கு இன்றும் பெருந்திரளானவர்கள் நத்தார் வலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சிரச – சக்தி நத்தார் வலயத்தில் பாரிய நத்தார் மரமொன்று இம்முறையும் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களுக்கான பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்