by Staff Writer 21-12-2018 | 8:02 PM
Colombo (News 1st) வவுனியா நகர சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி வசமுள்ள வவுனியா நகர சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று சபையில் சமர்பிக்கப்பட்டது
இதன்போது, 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
21 உறுப்பினர்கள் கொண்ட வவுனியா நகர சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது.