வவுனியாவில் இலாபம் ஈட்டித்தரும் அன்னாசி செய்கை

வவுனியாவில் விவசாயிகளுக்கு இலாபம் ஈட்டித்தரும் அன்னாசி செய்கை

by Staff Writer 21-12-2018 | 5:49 PM
Colombo (News 1st) வவுனியாவில் அன்னாசி செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு ஊடுபயிராக இந்த அன்னாசி செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு பரப்பளவில் அன்னாசி செய்கை மேற்கொள்வதனூடாக சுமார் 50,000 ரூபாவினை வருமானமாக ஈட்ட முடியும் என வவுனியமா மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அன்னாசி செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மரக்கறி செய்கையை விட அன்னாசி செய்கையூடாக அதிகளவில் வருமானத்தினை ஈட்டுவதாக விவசாயிகள் கூறினர். ஆரம்ப முதலீட்டை மாத்திரமே செலுத்தி குறைவான பராமரிப்பு செலவுடன் அதிக வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர். மாவட்ட விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் மூலம் வவுனியாவில் அன்னாசி பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.