பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம்

பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம்

by Bella Dalima 21-12-2018 | 7:39 PM
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரும்  இராஜாங்க அமைச்சர்கள் 17  பேரும்,  பிரதி அமைச்சர்கள் 7 பேரும்  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் 1. ஹர்ஷ டி சில்வா - பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சர் 2. அஜித் பி பெரேரா - டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் 3. சுஜீவ சேனசிங்க - விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் இராஜாங்க அமைச்சர்கள் 1. ரஞ்சன் ராமநாயக்க - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 2. விஜயகலா மகேஸ்வரன் - கல்வி 3. ஜே. சி. அலவத்துவள - உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி 4. எரான் விக்ரமரட்ன - நிதி 5. ரஞ்சித் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி 6. வசந்த அலுவிஹார - விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம பொருளாதார அலுவல்கள் 7. லக்கி ஜயவர்தன - நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்துவம் 8. நிரோஷன் பெரேரா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் 9. ருவன் விஜேவர்தன - பாதுகாப்பு 10. சம்பிக்க பிரேமதாச - சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 11. அசோக்க அபேசிங்க - போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் 12. ஃபைசல் காசிம் - சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவம் 13. எச்.எம்.எம். ஹரிஸ் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி 14. அமீர் அலி - விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமப்புற பொருளாதார அலுவல்கள் 15. திலிப் வேதாராச்சி - மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி 16. A.Z.M.ஷயீட் - சமூக வலுவூட்டல் 17. வடிவேல் சுரேஷ் - பெருந்தோட்டம் பிரதி அமைச்சர்கள் 1. அனோமா கமகே - பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி 2. எட்வர்ட் குணசேகர - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு 3. நளின் பண்டார - அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகம் 4. அஜித் மன்னப்பெரும - சுற்றுச்சூழல் 5. கரு பரணவிதான - தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி 6. புத்திக பத்திரண - தொழில் மற்றும் வர்த்தகம் 7. பாலித்த தெவரப்பெரும - சமூக வலுவூட்டல்