இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

by Bella Dalima 21-12-2018 | 4:37 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கணக்கறிக்கைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இடைக்கால கணக்கறிக்கையினூடாக முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவுகளுக்காக 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடன் தவணைகள் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு 970 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.