புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது

by Staff Writer 21-12-2018 | 10:25 AM

திருகோணமலை - மொறவெவ சாந்திபுரம் ஆண்டியாகல வனப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்த 7 கையடக்க தொலைபேசிகள், வேன் மற்றும் புதையல் தோணடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனக. தெஹியோவிட்ட, மஹதிவுல்வெவ, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.