சக்தி நத்தார் வலயம் இன்று ஆரம்பம்

சக்தி நத்தார் வலயம் இன்று ஆரம்பம்

by Staff Writer 21-12-2018 | 10:29 AM

இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சக்தி நத்தார் வலயம் கொழும்பு இரண்டு பிரேபுரூக் பிளேஸிலுள்ள எமது தலைமையக வளாகத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

சக்தியின் நத்தார் வலயம் நான்காவது தடவையாகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தினமும் மாலை ஐந்து மணியிலிருந்து நத்தார் வலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பரிசுத்த பாப்பரசரினால் ஆசீர்வதிக்கப்பட்ட மரியன்னையின் திருச்சொருபத்தை காணும் வாய்ப்பும் நத்தார் வலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் பிரம்மாண்டமான நத்தார் மரம் சக்தி நத்தார் வலயத்தை அலங்கரிக்கின்றது. சிறுவர்களுக்காகவே பிரத்தியேகமாக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சக்தி நத்தார் வலயத்தில் பனிமழையில் விளையாடும் வாய்ப்பு சிறுவர்களுக்கு கிடைக்கவுள்ளது. மயாஜால காட்சிகள், நத்தார் கரோல் கீத நிகழ்வுகள் ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிடலாம். சக்தி ரிவியின் பிரதான செய்திகள் நேரடியாக ஔிபரப்பாகும் விதத்தையும் சக்தி நத்தார் வலயத்தில் காண முடியும்.