எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு - பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

by Staff Writer 21-12-2018 | 10:55 AM

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலாகவுள்ளது. புதிய விலை முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதனடிப்படையில் 92 மற்றும் 96 ஒக்டேன் ரக பெட்ரல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைப்பட்டுள்ளது. ஒடோ டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் சுப்பர் டீஸல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.