அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: மஹிந்த அமரவீர

அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: மஹிந்த அமரவீர

அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2018 | 6:00 pm

Colombo (News 1st) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாரென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிட்டதாக அவர் கூறினார்.

மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பிலும் மஹிந்த அமரவீர கருத்து தெரிவித்ததுடன், அது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்