வௌ்ளை மிளகு உற்பத்தியை ஊக்குவிக்கத் திட்டம்

வௌ்ளை மிளகு உற்பத்தியை ஊக்குவிக்கத் திட்டம்

by Staff Writer 20-12-2018 | 5:59 PM
Colombo (News 1st) ஏற்றுமதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறு ஏற்றுமதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து வௌ்ளை மிளகு உற்பத்தியை சந்தையில் அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. மிளகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த வௌ்ளை மிளகு உற்பத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கருப்பு மிளகைக் காட்டிலும் வௌ்ளை மிளகின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.