புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று

by Staff Writer 20-12-2018 | 7:08 AM
Colombo (News 1st) புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (20) காலை 8.30 மணியளவில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. 30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையே பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்போது, அடுத்த வருடத்திற்கான இடைக்கால கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் அனுமதி பெறப்படும் இடைக்கால கணக்கறிக்கை நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையிலான நேற்றிரவு சந்திப்பொன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்து ஹெட்டிகம ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, அமைச்சரவையை நியமிக்கும்போது கவனத்திற் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர், டொக்டர் தனுஷ்க தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்