புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-12-2018 | 5:51 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் தகவல் வௌியிட்ட நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் அழிக்கப்பட்ட சில குரல் பதிவுகள் மீள பெறப்பட்டுள்ளன. 02. ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 03. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைப் போன்று நாட்டை ஸ்திரமற்றதாக்க விரும்பாததால் தீர்ப்பிற்கு முன்னரே பதவி விலகியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 04. தாம் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாக இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 05. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. துருக்கியில் 2016 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 2000 பேருக்கு, ஆயுள்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 02. ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், கடந்த சில வருட காலமாக ஊடுருவப்பட்டுள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' செய்தி வௌியிட்டுள்ளது. 03. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு, பிரித்தானிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. நியூஸிலாந்து மண்ணில் 12 வருடங்களின் பின்னர், இலங்கை டெஸ்ட் போட்டி ஒன்றை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது. 02. ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை, ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லயனல் மெஸி, ஐந்தாவது தடவையாகவும் சுவீகரித்துள்ளார்.

ஏனைய செய்திகள்