ஐ.ம.சு. கூட்டமைப்பில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதாவு தெரிவித்த எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை

by Bella Dalima 20-12-2018 | 9:16 PM
​Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதாவு தெரிவித்த எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். தாம் நிபந்தனைகளுடன் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் பதவிகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார். அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவே இப்பயணத்தில் இணைந்ததாகவும் ஏ.எச்.எம்.பௌசி கூறினார். திங்கட்கிழமை வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, புதிய கட்சி ஏதேனும் தொடங்கினால் அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்கப் போவதாக பியசேன கமகே தெரிவித்தார். தனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனவும் செய்ய வேண்டிய விடயங்களை உரிய நேரத்தில் செய்வார்கள் என நம்புவதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். பதவிகளை விட நாடே முக்கியம் என இந்திக்க பண்டாரநாயக்க கூறினார். எனினும், நீதிமன்ற உத்தரவு அடிப்படை இடையூறாக அமைந்துள்ளதாகவும் ஜனவரி மாதம் நீதிமன்ற உத்தரவை நீக்கிக்கொண்டு விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்