by Bella Dalima 20-12-2018 | 4:19 PM
Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் இலங்கையின் அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் மூலம் அவர்கள் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய நிரல்படுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில் 8 இடங்கள் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ் 16 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
குசல் மென்டிஸ் 2 இடங்கள் முன்னேறி 18 ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ் ஆகியோர் சதமடித்தனர்.
இதன்போது, இவர்கள் இருவரும் நான்காம் நாள் முழுவதும் களத்தில் நின்று சாதனை படைத்தனர்.
இந்தப் பட்டியலில் இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார்.