செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-12-2018 | 6:11 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஆளுங்கட்சியில் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க ஜனாதிபதி தீர்மானித்ததாக, ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார். 02. பெரும்பான்மைக்கு அமைய செயற்படுவதே இந்நாட்டின் சம்பிரதாயம் என சபாநாயகர் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 03. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக்கொள்வதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 04. மஹியங்கனை பகுதியில், போலியான முறையில் அச்சிடப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்புகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 05. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வௌிநாட்டுச் செய்தி 01. இந்தியாவின் மும்பையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 ​பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 2 மாதக் குழந்தையொன்றும் இதன்போது உயிரிழந்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவுக்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்